ஆன்மிக களஞ்சியம்

மகாத்மா காந்தி குறிப்பிட்ட ராம நாமத்தின் உட்பொருள்

Published On 2024-06-23 12:00 GMT   |   Update On 2024-06-23 12:00 GMT
  • அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

* காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.

* கிழக்கு முகமாக அமருங்கள்.

* ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

* மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது 'இயற்கை வைத்தியம்' என்ற புத்தகத்தில் 'ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல.

அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அவர்கள் 'ராம' நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

மேலும் 'ராம' நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார்.

இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'ரா' என்பது 'ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், 'ம' என்பது 'ஓம் நம சிவாய' என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

கந்தர் சஷ்டி கவசத்தில் கூட 'ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி' என சொல்லப்படுகின்றது.

'ரா' என்ற எழுத்தும் 'ம' என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது.

ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

Tags:    

Similar News