- ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்.
- ஆரஞ்சு ரோஜா-ஆர்வமுள்ள பக்தி
மலர்களின் மகத்துவம்
ஒருவரது மனதை நிலைப்படுத்தும் சக்தி மலருக்கு உண்டு. 'கொடிரோஸ்' மலரை அன்னை, 'சுமுகமான மலர்' என்றழைத்தார். இம்மலர் வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். சுமுகமாக வாழ்க்கை கிடைக்கும் என்கிறார்.
ஒவ்வொரு மலரின் மகத்துவ குணம் என்ன என்பதை புதுவை அன்னை வெளியிட்டுள்ளார்
அசோக மலர் - கவலையின்மை
அரளி (வெள்ளை) - தெய்வ சிந்தனை
அல்லி (சிவப்பு) - திருமகளின் அருள்
அலரி (வெண்மை) - இறைநினைவு
ஆவாரம்பூ - கூர்த்தமதி
இரங்கூன் மல்லி - விசுவாசம்
ஊமத்தை - தவம்
எள்ளுப்பூ - சமரசம்
எருக்கம்பூ- தைரியம்
எலுமிச்சைப்பூ- கற்புத்திறன்
கத்திரிப்பூ- பயமின்மை
கருவேலம்பூ- ஞானம்
காகிதப்பூ- பாதுகாப்பு
சண்பகம்- உள்ளம் பக்குவப்படுதல்
சம்பங்கி- படைப்புத்திறன்
சாமந்தி- வீரியசக்தி
சாமந்தி - முழு அமைதி
செம்பருத்தி- விரைந்து செயல்பாடு
சிவப்பு செம்பருத்தி- நிறைந்த சக்தி
செங்காந்தள்- சச்சரவின்மை
சூரியகாந்தி- கலை நுண்ணறிவு
கொத்தமல்லிப்பூ- மென்மை
கொடிரோஸ்- சுமுகம்
கொய்யாப்பூ- நிதானம்
டிசம்பர்பூ- விழிப்புணர்வு
(வெண்) தாமரை- இறையருள்
தாழம்பூ- ஆன்மீகமனம்
தும்பைப்பூ- உண்மைவழிபாடு
தூங்குமூஞ்சிப்பூ- விவேகம்
நந்தியாவட்டை- தூயமனம்
நாகலிங்கப்பூ (சிவப்பு)- செல்வவளம்
நித்யகல்யாணி (சிவப்பு)- சுயநலமின்மை
நித்யகல்யாணி (வெண்மை)- நல்ல முன்னேற்றம்
பருத்தி ரோஜா- தெய்வீக அருள்
பன்னீர்ப்பூ- சாந்தமான உணர்வு
பவளமல்லி- தெய்வீக ஆர்வம்
பாதாம்பூ- ஆன்மீக உணர்வு
பாரிஜாதம்- தூய ஆர்வம்
பாகல்பூ- இனிமை
பாக்குமரப்பூ- தெம்பு
பீர்க்கம்பூ- அன்புமனம்
புன்னைப்பூ- உடலில் அமைதி
புகையிலைப்பூ- பகுத்தறிவு
பூசணிப்பூ- தாராளம்
பூவரசம்பூ- ஆரோக்கியம்
பெருக்கொன்றை- சேவைமனப்பான்மை
பெட்டுனியா- உற்சாகம்
மகிழம்பூ- பொறுமை
மனோரஞ்சிதம்- தெளிவான சிந்தனை
மல்லிகை- தூய்மை
மரமல்லிகை- உருவமாற்றம்
(பவழ) மல்லிகை- இறைவேட்கை
மாதுளம்பூ- தெய்வபக்தி
விருட்சிப்பூ- மன அமைதி
வேப்பம்பூ- ஆன்மீக இன்பம்
வாடாமல்லி- மரணமிலா வாழ்வு
வேலம்பூ- தெய்வீக ஞானம்
ஆரஞ்சு ரோஜா- ஆர்வமுள்ள பக்தி
சிவப்பு ரோஜா- ஆழ்ந்த உணர்வு
வெள்ளை ரோஜா- பூர்ண தெய்வபக்தி
இளஞ்சிவப்பு ரோஜா- சரணாகதி