ஆன்மிக களஞ்சியம்

மகாலட்சுமியின் அம்சமான மஞ்சளின் மகிமை

Published On 2024-04-12 11:30 GMT   |   Update On 2024-04-12 11:30 GMT
  • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.
  • சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனத்திற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.

மகாலட்சுமியின் இருப்பிடமாக மஞ்சளை சொல்வார்கள்.

மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை தூவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.

எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் போல ஒரு உருவத்தை செய்துவிட்டு,

அதற்கு குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.

சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறலாம்.

Tags:    

Similar News