ஆன்மிக களஞ்சியம்

மஹாயோக பீடம்

Published On 2023-11-19 12:40 GMT   |   Update On 2023-11-19 12:40 GMT
  • இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.
  • பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

மஹிஷி சம்காரத்தின் பொருட் ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம்.

இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக பிரம்மசர்யத்தைக் கடை பிடிக்கிறார் அய்யப்பன்.

கலியுகத்தின் மாயை பாதிக்காத இடமாகவும் சகல பாவங்களையும் மாய்க்கும் இடமாகவும் விளங்கும் காரணத்தால்,

பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப்படுகிறது.

அதனால்தான் அந்தத் தலத்தைத் தனது ஆலயமாக பகவான் தேர்ந்தெடுத்தார்.

ஆகாச கங்கையே மதங்க முனிவரின் தத்துவத்திற்கிணங்கி, பம்பா நதியாக உருவெடுத்து வந்தது.

பகவான் சாஸ்தா ஆகாச கங்கையுடனே பூலோகம் அடைந்து பம்பைக் கரையில் குழந்தையாகக் காட்சி தந்தார்.

அங்கேயே திருக்கோவில் கொண்டார்.

Tags:    

Similar News