மலைபோல் வரும் துயர் யாவும் பனிபோல் நீங்கிவிடும்
- திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.
- “முடித்து நிற்கிறேன்” என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.
திருவேற்காடு ஆலயம் வந்து, மண்ணை மிதித்தாலே போதும் குறைகள் மறைந்து விடுகின்றன.
அம்மனின் திருச்சாம்பலைப் பெற்று சென்றாலே தங்கள் வாழ்வில் அதன்பின் ஏற்படும் மாற்றங்களை அவர்களே உணரத் தலைப்பட்டு விடுகிறார்கள்.
அம்மனிடம் வாய்விட்டுச் சொல்லாமலே அவர்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருளுகிறாள்.
"அம்மனிடம் மனமுருகித் தாயே நீ காத்து நில்" என்று வேண்டினால் போதும்.
மலைபோல் வரும் துயர் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் பனிபோல், நீங்கி விடுகிறது.
இங்கு மந்திரமோ, தாயத்தோ, மாய வித்தைகளோ கிடையாது.
இறைவியிடம் பேசும் தெய்வத்திடம், அகில உலகையும் காத்து இரட்சிக்கும் தெய்வத்திடம்
மனமுருக மனதில் வேண்டினால் போதும் அப்படியொரு சக்தி.
அது மட்டும்மல்ல, அன்னை வாக்கிட்டால் இதுவரை தப்பியதில்லை.
"முடித்து நிற்கிறேன்" என்று வாக்கிட்டால் எப்படியும் நன்மையாக முடித்து நிற்பாள்.
சிலர் வந்த உடனேயே முடியவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
"அம்மன் முடித்து நிற்பாள்" எனக் காத்திருந்து பொறுமை காத்தவர்கள் உரிய பலனை பெறாமல் போனதில்லை.
அன்னையின் செயல்பாடு அவள் நாதன் இட்ட கட்டளைப்படி நடைபெறுகிறது.
தலையெழுத்தை மாற்றம் வலிமை இல்லையென்றால் அதையும் எடுத்துக் கூறிவிடுகிறாள்.
இது நடக்கமா? நடக்காதா? என்று சோதிடம் போல் கேட்கக்கூடாது "தாயே முடித்து வை"
என்று வேண்டுவோர்க்கு நன்மையாக முடிகிறது.
"நாம் விரும்பியது நிறைவேற வேண்டும்" என்று வேண்டும்போது, நல்லதாயின் முடித்துவை
என்று விபரமாகக் கேட்பவர்களுக்கு நல்லதாக நடைபெறுமாயின் முடித்து வைக்கிறாள்.
கெடுதல் விளையுமாயின் அதனைத் தடுத்து நிறுத்தி விடுகிறாள் அத்தெய்வம்.