null
- சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.
- இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.
ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார்.
வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.
சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.
இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.
இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடி உள்ளார்.
இவரை தரிசனம் செய்வதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
மணக்கோலத்தில் காட்சி தரும் முருகன் இது போன்று வேறு எங்கும் கிடையாது என்பது சிறப்பு அம்சமாகும்.
இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமண தடை நீங்கி மனம் போல வாழ்க்கை துணை அமையும் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.