ஆன்மிக களஞ்சியம்
- உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.
- இவ்வுருவையே “மார்த்தாண்ட பைரவர்” என்று நூல்கள் கூறுகின்றன.
உமையொருபாகனாக சிவபெருமான் போல, லக்ஷ்மி பாகனாகத் திகழும் விஷ்ணு போல, உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான்.
எந்த உஷாதேவி சூரியனின் முன்னர் வெளிப்பட்டு உலகின் இருளை அகற்றுகிறாளோ அவளையே தனது அருள் சக்தி வடிவாகக் கொண்டு சூரிய நாராயணன் நமது அஞ்ஞானமான இருளை அழித்து ஒளிமயமான அறிவாக கவிதையாக மலர்வதைத் தான் இவ்வுருவம் சித்தரிக்கிறது.
இவ்வுருவையே "மார்த்தாண்ட பைரவர்" என்று நூல்கள் கூறுகின்றன.
இதுவே உன்னதத் தத்துவம், கண்கண்ட தெய்வமான சூரியனினும் ஆணும், பெண்ணுமாக இணைந்த உருக்கொண்டு அருள் பாலிக்கும் பாங்கை பொங்கல் திருநாளில் நினைவில் நிறுத்தலாமே.