மருதமலை-புது வீடு கட்டி குடியேறும் பாக்கியம்
- கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
- மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.
மருதமலை முருகன் கோவிலுக்கு வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு உள்ளது.
மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
அந்தளவுக்கு முருகப் பெருமான் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறார்.
புதுவீட்டில் குடியேறலாம்
குறிப்பாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையடிவார படிக்கட்டுகளில் இருந்து கற்கள் மேல் கற்கள் வைத்து அடுக்கி கொண்டு வழிபட்டு செல்கிறார்கள்.
அதென்ன.. புதுவித வழிபாடாக உள்ளதே? என்று கேட்கிறீர்களா.!
ஆம்! கற்கள் மீது கற்கள் வைத்து வழிபட்டால் முருகப்பெருமான் கருணை தம் மீது விழும்.
இதனால் கற்களை எப்படி பக்தர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தார்களோ, அதுபோல் புது வீடு கட்டி குடியேறுவார்கள் என்று இன்றளவும் பக்த கோடிகளால் நம்பப்பட்டு வருகிறது.
மருதமலை முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகிறார்கள்.
இங்கு முருகப் பெருமானை மனமுருக வேண்டி படிக்கட்டுகளில் கற்களை அடுக்கி வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.
இதனால் பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து முருகப்பெருமான் நிவர்த்தி செய்கிறார்.
விரைவிலேயே பக்தர்கள் வேண்டிய வரங்களை அளித்து அவர்களின் வாழ்க்கையில் செல்வத்தை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.