மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்-எப்படி செல்வது?
- மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது.
- மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாக பேருந்து உள்ளது.
எப்படி செல்வது?
மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும்,
சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது
மற்றும் மேல்மலையனூர்-செஞ்சி, திண்டிவனம்,பாண்டிச்சரிக்கும் மேல்மலையனூர்-விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர்-ஆரணி வேலூர் செல்லவும்,
மேல்மலையனூர்-அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும்,
மேல்மலையனூர்-திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
செஞ்சி-, திண்டிவனம்-, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை-, விழுப்புரம்-, வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, பெங்களூர்- ஆகிய ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு நேரடியாக செல்ல பஸ் வசதி உள்ளது.
மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.