- வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.
- அகநானூறு, பங்குனி உத்திரத்தை, “பங்குனி முழக்கம்” என்று குறிப்பிடுகிறது.
பங்குனி உத்திரம் மிக பழமையான விழாக்களில் ஒன்றாகும்.
பழந்தமிழ் நாட்டில் சோழர் தலைநகராக விளங்கிய உறையூரில் மிகப் பெரிய விழாவாக இது நடைபெற்றது.
அகநானூறு, பங்குனி உத்திரத்தை, "பங்குனி முழக்கம்" என்று குறிப்பிடுகிறது.
பங்குனி உத்திரத்தன்று காவிரியின் தென்கரை, வடகரை இரு பகுதிகளிலும், அதன் வடக்கே அமைந்த கொள்ளிட ஆற்றங்கரைகளிலும்,
பற்பல ஊர்களின் மக்கள், இரவு நேரங்களில் ஆற்றின் மணல் வெளிகளில் இறை உருவங்களை அமைத்து,
அலங்கரித்து, திருவரங்கப் பெருமாளையும், வயலூர் முருகப் பெருமானையும் வழிபாடு செய்வார்கள்.
வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.
மக்களின் குலவை ஒலியும், இசை நடனம் ஆகிய கொண்டாட்டங்களின் ஓசையும் நிறைந்து பவுர்ணமித் திருவிழா, தேசிய திருவிழாவாகவே நடைபெறும்.
போரில் வெற்றி பெறும் சோழர்களின் புகழ் பெற்ற நகராகிய உறையூரில், கரைகளில் ததும்பி நீர் நிறைந்து செல்லும்.
காவிரியாற்றின் கரைகளில் உள்ள வெண்மணல் நிறைந்த சோலைகளில் "பங்குனி முழக்கம்" என்ற திருவிழாவில்,
மரத்தடி தோறும் அடுப்பு மூட்டிப் பொங்கலிட்டு வழிபட்டு விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
என்ற கருத்தில் உறையூர் முதுகூத்தனார் என்ற புலவர் அகநானூற்றில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
பங்குனி உத்திரத்தன்று காவிரியின் வடகரையில் உள்ள ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீரங்கநாச்சி யாரும் இணைந்து அமர்ந்து திருக்காட்சி தருவர்.
பங்குனி உத்திரத்தன்று இரவு முழுவதும் இணைந்து காட்சி தரும் திவ்ய தம்பதியரை "சேர்த்திப் பெருமாள்" என்று போற்றி அடியவர் வழிபாடு செய்வர்.
உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில் தான் "கதியத்ரையம்" என்ற நூலை அருளச் செய்தார்.
திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரரப்படி உரையையும், திருப்பாவைக்கு ஈராயிரப்படி உரைகளையும் சரணாகதி கத்யத்துக்கு விரிவுரையும் எழுதிய நஞ்சியா என்ற திருமாலடியார் பங்குனி உத்திரத் திருநாளில் தான் தோன்றினார்.