- 18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
- ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.
கொடி மரம்
18 படிகளையும் கடந்தால், நம் எதிரே தென்படுவது கொடி மரம். பரசுராமர் காலத்தில் இங்கே கொடி மரம் கிடையாது.
பிற்காலத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பரசுராமரால்
ஐயப்பன் அருகில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த குதுரை, கொடி மரத்தின் மேல் வைக்கப்பட்டது.
18 படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடி மரத்தைதான்.
மூலஸ்தானமும் தவக்கோல தரிசனமும்
ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம்.
மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.
தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு 'சின்முத்திரை' காட்டுகிறார்.
'சித்' என்றால் 'அறிவு' எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.
எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்' முத்திரையாகும்.
'சின்' முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது.
ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாத்துவார்கள்.
அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள்.
இதற்கு தவக்கோலம் என்று பெயர்.
அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள்.
அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது.
கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.
அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது.
சின் முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும்.
இந்த அதிசயத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.