ஆன்மிக களஞ்சியம்

முருகன் 108 போற்றி!

Published On 2024-07-30 12:00 GMT   |   Update On 2024-07-30 12:01 GMT
  • பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி
  • திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

ஓம் அருவாம் உருவாம் முருகாபோற்றி

திருவார் மறையின் செம்பொருள்போற்றி

ஆறுமுகத்தெம் அரசேபோற்றி

மாறுகொள் சூரரை வதைத்தாய்போற்றி

இருள்கெடுத்திருன்பருள் எந்தாய்போற்றி

உருள்பூங்கடம்பணி உறவோய்போற்றி

ஈசற்கு இனிய சேயேபோற்றி

மாசறு திருவடி மலரோய்போற்றி

உறுநர்த் தாங்கும் உறவோய்போற்றி

செறுநர்த் தேய்த்த செவ்வேள்போற்றி

ஊனில் ஆவியார் உயிர்போய்போற்றி

கானில் வள்ளியின் கணவபோற்றி

எழில்கொள் இன்ப வாரிதிபோற்றி

அழிவிலாக் கந்தனாம் அண்ணல்போற்றி

ஏறுமயிலூர்ந்த தேகுவாய்போற்றி

கூறுமன்பர்க்குக் குழைவாய்போற்றி

ஐயனாய் உலகை ஆக்குவாய்போற்றி

செய்ய மேனியனே தேவேபோற்றி

ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய்போற்றி

பருவம் முதிராப் பண்பேபோற்றி

ஓவற இமைக்கும் ஒளியேபோற்றி

மாமுதல் தடிந்த மறவபோற்றி

ஒளவியம் அறுத்தோர்க்கு அருள்வோய்போற்றி

தெய்வம் எல்லாந்தொழும் செய்யாபோற்றி

எக்கும் வேலுடை இறைவாபோற்றி

வெக்குதல் அற்றார் விளக்கேபோற்றி

கந்தா மணமார் கடம்பாபோற்றி

காப்பாய் படைப்பாய் கழிப்பாய்போற்றி

மூப்பீறற்ற முதல்வாபோற்றி

கிள்ளை மொழியுமை பிள்ளாய்போற்றி

கள்ளப் புலனைக் களைவாய்போற்றி

கீழறும் அடியர் கிழவோய்போற்றி

குன்றும் குழைந்தோட் குமரபோற்றி

என்றும் இளைய ஏறேபோற்றி

கூம்புகைத் தேவர் கோவேபோற்றி

பாம்பணி சிவனார் பாலகபோற்றி

கெண்டைக் கண்ணியர் கேள்வபோற்றி

அண்டினோர்க் கருளும் அங்கணபோற்றி

கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய்போற்றி

வீடில் வீடருள் விமலபோற்றி

கைவேல் கொண்ட காவல்போற்றி

நைவேற் கருள்வாய் நாயகபோற்றி

கொடைக் கடன்கொண்ட குழகபோற்றி

படைக்கடல் தலைவ பரனேபோற்றி

கோதில் அமிழ்தே குருமணிபோற்றி

போதில் அமர்ந்த பொன்னேபோற்றி

சிவபிரான் கண்வரு சேயேபோற்றி

நவ சரவணத்தில் நகர்ந்தாய்போற்றி

அறுவுரு அமைந்தே ஆடினாய்போற்றி

அறுமீன் பாலுண் அமரபோற்றி

பெருமை பிறங்கு பெரியோய்போற்றி

நான் முகமைச் சிறை நாட்டினாய்போற்றி

மான்மகள் வள்ளியை மணந்தாய்போற்றி

செங்கண் கடாவைச் செலுத்தினாய்போற்றி

அங்கண் குறிஞ்சிக்கு அரசேபோற்றி

இறைவனுக்கரும்பொரள் இசைந்தாய்போற்றி

மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய்போற்றி

பரங்குன்றமர்ந்த பரம்பரபோற்றி

திருச்செந்தில் வளர் சேவகபோற்றி

ஆவிணன் குடி ஆண்டாய்போற்றி

மேவி ஏரகம்வாழ் மிக்கவபோற்றி

குன்று தோறாடும் குழந்தாய்போற்றி

துன்று பழமுதிர் சோலையாய்போற்றி

திசைமுகம் விளக்கும் செம்முகபோற்றி

இசைபெரு வேள்வி அன்முகபோற்றி

செங்களம் ஓர்க்கும் திருமுகபோற்றி

மங்கல மான வானவபோற்றி

வள்ளிபால் நகைகொள் மாமுகபோற்றி

திங்களின் ஒளிரும் சீர்முகபோற்றி

ஆர்வலர் ஏத்த அருள்முகபோற்றி

சீர்வளர் அழகின் செல்வாபோற்றி

மணிமுடி புணையாறணிமுடிபோற்றி

துணையடி தொழுவார்க் கணைவாய்போற்றி

செவியீராறுடைச் செம்மால்போற்றி

கவித்தொடை புனைந்தோட் கந்தாபோற்றி

பன்னிரு கண்ணுடைப்பண்ணவபோற்றி

என்னிரு கண்ணின் இலகுவோய்போற்றி

பொருவில் ஒருவனாம் புலவபோற்றி

அருணகிரிக்கு அருள் அமலபோற்றி

நக்கீரற் கருள் நாதாபோற்றி

தக்க சங்கத்தமிழ் தந்தாய்போற்றி

குமர குருபரற் கருளினைபோற்றி

பந்த பாசங்களைப் பறிப்போய்போற்றி

கந்தபுரி வாழ் வுகந்தோய்போற்றி

தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய்போற்றி

பொய்யிலான மனத்துட் புகுவோய்போற்றி

கோழி வெல்கோடிக்கோவேபோற்றி

ஊழி தோறூழி உள்ளாய்போற்றி

செய்யாய் சிவந்த ஆடையாய்போற்றி

மெய்யெல்லாம் வெண்ணீறணிவோய்போற்றி

மேவலர் மடங்கலாம் முத்தபோற்றி

வேர்கள் சிறைமீள் சீர்வலாய்போற்றி

சேவலும்மயிலும ¢சேர்த்தோய்போற்றி

போர்மிகு பொருந புரநல போற்றி

ஏர்மிகு இளஞ்சேய் தார்விலாய்போற்றி

பாரகம் அடங்கலும் பரவுவோய்போற்றி

தமிழ்மொழி இன்பில் தழைப்பாய்போற்றி

அமிழ்திற்குழைத்த அழகாபோற்றி

கல்வியும் செல்வமும் கனிந்தருள்போற்றி

இன்பார் இளைய ஏந்தால்போற்றி

என்பால் அருள்புரி என்றும்போற்றி போற்றியே...

Tags:    

Similar News