முருகன் அவன் ஜென்ம நட்சத்திர பாக்கியம்
- தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.
- இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.
நட்சத்திர வரிசையில் 3வது இடத்தில் கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரம் உள்ளது.
ஆனால் 27 நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகைதான்.
கத்தி போல அமைந்துள்ள நட்சத்திர கூட்டமே கிருத்திகை.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.
இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை அவசியம் வழிபட வேண்டும்.
கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சிக்கலில் உள்ள சிங்காரவேலனின் தரிசனம் நன்மை தரும்.
2, 3, 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு திண்டிவனம் அடுத்துள்ள மைலம் முருகன் தலம் மகத்துவம் கொடுக்கும்.
பொதுவாக கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள்.
சுறுசுறுப்பும், வெளிப்படையான பேச்சும், தெய்வ பக்தியும் இவர்களது இயல்பு.
ஆடை அணிவதில் கூட இவர்களிடம் ஒரு நேர்த்தியை பார்க்க முடியும்.