ஆன்மிக களஞ்சியம்

முழு முதற் கடவுளுக்கான விரதம்

Published On 2023-10-28 11:38 GMT   |   Update On 2023-10-28 11:38 GMT
  • விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள்.
  • சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து

அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

விரதம் என்றால் உண்ணா நோன்பு என்று பொருள்.

உணவு உண்ணாமல் இறைவனை முழுமனதோடு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

விரதம் என்றால் சிலர் முழுமையாக உணவு உண்ணாமல் இருப்பர், சிலர் காலையில் மட்டும் உணவு உண்ணாமல் இருப்பர்.

சிலர் பால் மற்றும் பழம், பழச்சாறு இவற்றை உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு என்ன கோரிக்கை இருக்கிறதோ, அதற்கேற்ற கடவுளைத் தேர்ந்தெடுத்து

அதற்குரிய நாளில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது.

இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால்,

முழு முதற்கடவுளாம் கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி.

ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் சதுர்த்தி 'பெரிய சதுர்த்தி' ஆகும்.

ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம்.

பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது.

உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது.

சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.

Tags:    

Similar News