- பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது.
- இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக் காரர்கள், எல்லாரும் போவார்கள்.
பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமழப் பாடியில் திருமணம் நடந்தது.
தன் மகன் போல் உள்ள பக்தன் நந்திக்கு திருமணம் செய்து வைக்க எண்ணம் கொண்டார்.
திருவையாறு ஐயாறப்பன் புலிக்கால் முனிவரான வியாக்ர பாத முனிவரின் மகள் சும்பிரகாசைக்கும் ஐப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்வித்தார்.
இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு சில செலவுகளை ஏற்றுக் கொண்டனர்.
பழமும், பூவும், நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினர்.
இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களக்கு நன்றி கூறினார் நந்திதேவர்.
இந்த நன்றி கூறும் திருவிழாவிற்கு ஏழூர் பெருவிழா எனப் பெயர்.
ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரு பல்லக்கு களுடன் அந்த ஏழு ஊர்களின் பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்த திருவையாறு அடைவார்கள்.
பின் எல்லா ஊர் பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும் பிரபஞ்ச தம்பதிகளிடமும் (சிவ&பார்வதி) விடை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர் போய்ச் சேருவார்கள்.
முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத்துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் இவ்விழா.
இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக் காரர்கள், நாயனக்காரர்கள் எல்லாரும் போவார்கள்.
எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம் கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலா கலமாகவும் இவ்விழா நடைபெறும்.