ஆன்மிக களஞ்சியம்

இடபத்தின் (நந்தியின்) வாயிலிருந்து வெளிவரும் நீர்

Published On 2024-05-31 11:20 GMT   |   Update On 2024-05-31 11:20 GMT
  • எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.
  • புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எக்காலத்திலும் குறைவின்றி நீரை வாயிலிருந்து உமிழ்ந்து கொண்டிருக்கும் இந்த ரிஷப உருவத்தின் அருகே குளத்திற்கென ஒரு கைப்பிடிச் சுவரினை உருவாக்கியவர்கள் கல்வெட்டோடு கூடிய இடபத்தின் பெரும்பகுதியை சுவரினுள் மறையுமாறு செய்துவிட்டனர்.

நூறாண்டுகளுக்குள் நடந்த இத்திருப்பணிகள் காரணமாக அரிய தகவலைத் தரும் தமிழ்க் கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நற்பேறாக இந்திய தொல்லியல் துறையினர் 1904 ம் ஆண்டில் அதனைப் படி எடுத்துக் காப்பாற்றிவிட்டனர்.

இந்த இடபத்தின் வாயில் திகழும் குழல்போன்ற பகுதிக்கு எங்கிருந்து நீர் வருகிறது என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.

புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

சில அன்பர்கள், கை, கால்கள் கழுவுவதற்காக பயன்படுத்துவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் இந்த அற்புதப் படைப்பு திகழ்ந்தாலும் ஒரு தமிழ்ச் சிற்பியின் அறிவியல் திறனோடு கூடிய அரிய சாதனை இது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அதுதான் உண்மை!

திருக்காரிக்கரையுடைய மகாதேவர் கோவில், திருவாலீசுரம் என முதன் முதலில் குறிக்கப் பெறுவது வீரகம்பண உடையாரின் கி.பி. 1365ம் ஆண்டு சாசனத்தில்தான்.

அதே சாசனம் இத்தலத்து காலபைரவரை வைரவ நாயனார் என்று குறிப்பிடுகின்றது.

பெரும்பாலான சாசனங்கள் திருவிளக்குகள் எரிப்பதற்காக அளிக்கப்பெற்ற கால்நடைப் பண்ணைகள் மற்றும் நிலதானங்கள் பற்றி குறிப்பிடுகின்றன.

ஒரு சாசனத்தில் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான சுவாமி தேவர் பெயரில் திருக்காளத்தி தேவ சதுர்வேதி மங்கலத்தில் காணிவிட்ட செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News