ஆன்மிக களஞ்சியம்

நவ கயிலாயங்கள்

Published On 2023-12-08 12:00 GMT   |   Update On 2023-12-08 12:00 GMT
  • அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோம முனிவர் சிவனை வழிபட்டு முத்தியடைந்தார்.
  • மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றி செய்திகளும், பெயர்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை,

ராஜாபதி மற்றும் சேர்ந்தமங்கலம் ஆகிய ஒன்பது தலங்களும் நவகயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் முதல் மூன்றும் மேலக் கயிலாயங்கள் என்றும், அடுத்த மூன்றும் நடுக்கயிலாயங்கள் என்றும்,

கடைசி மூன்றும் கீழக் கயிலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

முதல் நான்கு கயிலாயங்கள் நெல்லை மாவட்டத்திலும், மீதமுள்ள ஐந்தும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

பொதிகை மலையில் தவமிருந்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக இருந்து பணிவிடைகள் செய்தவர் உரோமவ முனிவர்.

சிவபெருமானை நினைத்து வழிபட்டுவந்த தவ வலிமை மிக்க உரோம முனிவருக்கு சிவபெருமானின்

அருளைப்பெற்று முக்தியடைய வேண்டும் என்பது பெரும் விருப்பம்.

இதையறிந்த அகத்தியர், தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் விருப்பம் நிறைவேறும், என்றார்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் உன்னுடன் ஒன்பது மலர்களைத் தண்ணீரில் அனுப்புகிறேன்.

இந்த மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அங்கு சிவனை வழிபட வேண்டும்.

பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உமது விருப்பம் ஈடேறும் என்றார்.

அகத்தியர் கூறியவாறு மலர்கள் நிற்கும் இடங்களில் உரோம முனிவர் சிவனை வழிபட்டு முத்தியடைந்தார்.

பிருங்க முனிவரும் நவகயிலாயங்களுக்கு வந்து இறைவனைத் தரிசித்து தனது சாபம் நீங்கப் பெற்று இறைவனை அடைந்தார் என்கிறது புராண காலத்து வரலாறு.

நவகயிலாயம் பற்றிய சான்றாக ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோலிலில் கல்யாண குறடு என்று அழைக்கப்படும்

மண்டபத்தின் மேலே ஒன்பது இடங்களைப் பற்றி செய்திகளும், பெயர்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

உரோம முனிவரின் சிலை ஸ்ரீவைகுண்டம் கோவிலில் ஒரு தூணிலும், சேரன்மாதேவி கோவிலிலும் காணப்படுகின்றன.

கல்வெட்டுச் சான்றும் உள்ளது.

Tags:    

Similar News