ஆன்மிக களஞ்சியம்

நவ கன்னிகைகளுக்கும் மாங்காடு காமாட்சி அம்மனுக்கும் என்ன சம்பந்தம்?

Published On 2023-09-25 10:30 GMT   |   Update On 2023-09-25 10:30 GMT
  • இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்
  • கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

நவ கன்னிகைகள் சந்நிதியும் மனதிற்கு அமைதியைத் தருகின்றது.

அம்மன் தவமிருக்க ஆரம்பிக்கும் பொழுது, தன் தவத்திற்குக் காவலாக எட்டு கன்னிகைகளுக்கு காவல் பணியைக் கொடுத்தாள்.

அம்மனோடு சேர்த்து ஒன்பது கன்னிகைகளாக கோவிலிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

மாங்காடு காமாட்சி அம்மனின் கோவில் உள் வடிவமைப்பு சுமார் 4,500 சதுர அடி பரப்பளவு உள்ளதாகும்.

நம் துன்பங்கள் நீங்குவதற்கு மாங்காடு அம்மன் திருவருள் துணைபுரியும்.

தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் காமாட்சி அன்னை.

எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் காமாட்சி அம்மனின் கருணையை மாங்காடு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

சிவன், விஷ்ணு, பிரம்மன், எமன், இந்திரன் முதலிலிய தேவர்களின் சக்திகளைத் தன்னுள் அடக்கி இருப்பவள் மாங்காடு காமாட்சி.

இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்.

கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

உடல்ரீதி யான உபாதைகளுக்கும் காமாட்சி அம்மனை தரிசித்து வேண்டிக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

மாங்காடு அம்மன் கோவிலிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும்.

இந்த பூஜை முறையில் எலுமிச்சம் பழத்தை அம்மனாக மனதில் பாவித்து வழிபடுதல் விசேஷம் ஆகும்.

Tags:    

Similar News