- முன்னொரு காலத்தில் காலவர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார்.
- காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார்.
முன்னொரு காலத்தில் காலவர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார்.
அவர் முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடைய வராகத் திகழ்ந்தார்.
இதனால் சில முனிவர்கள் அவரிடம் வந்து தங்களது வருங்காலம் பற்றி கேட்டு அறிந்து கொள்வது வழக்கம்.
காலதேவனின் கேள்விக்கணை
ஒருநாள் இளந்துறவி ஒருவர் காலவ முனிவரிடம் வந்தார்.
தனது வருங்காலம் பற்றி அறிவிக்கும்படி கேட்டார்.
காலவ முனிவர் தமது ஞானதிருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலம் பற்றி ஆராய்ந்தார்.
"உமது வருங்காலம் பற்றிக் கூற ஒன்றும் இல்லை" என்றார்.
உடனே அந்த இளந்துறவி காலவ முனிவரைப் பார்த்து "முனிபுங்கவரே! மற்றவரின் வருங்காலம் பற்றிக் கூறும் நீர் உம்முடைய வருங்காலம் பற்றி அறிந்ததுண்டோ?" எனக் கேட்டு நகைத்தார்.
உடனே காலவ முனிவர் இளந்துறவியைப் பார்த்து, 'இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. உண்மையைக் கூறு' என்று வினவினார். 'என்னைத் தெரியவில்லையா? நான்தான் காலதேவன்' என்று சொல்லி இளந்துறவியாக வந்தவர் மறைந்தார்.