ஆன்மிக களஞ்சியம்

நித்திய பூஜைகளும் திருவிழாக்களும்

Published On 2023-12-23 13:15 GMT   |   Update On 2023-12-23 13:15 GMT
  • இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
  • சித்திரை : திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

நித்திய பூஜைகள்

இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

அவையானவ:

1. திருப்பள்ளி எழுச்சி காலை மணி 6.00 முதல் 7.00

2. காலசந்தி காலை மணி 8.30 முதல் 10.00

2. உச்சிக்காலம் காலை மணி 11.00 முதல் 12.00

4. சாயரட்சை மாலை மணி 5.30 முதல் 6.30

5. இரண்டாம் காலம் மாலை மணி 7.30 முதல் 8.30

6. அர்த்தசாமம் இரவு மணி 8.30 முதல் 9.30

திருவிழாக்கள்

திங்கள் தோறும் நடைபெறுவன.

சித்திரை: திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

வைகாசி : அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

ஆனி: உத்திரத்தில் நடராசர் அபிஷேகம்.

ஆடி: பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூஜை செய்வித்தல், இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல். அம்பாளுக்கு ஆடிப்பூர -பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

ஆவணி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

புரட்டாசி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். நிறைபணி, தேவேந்திரபூஜை, நவராத்திரி விழா, விசயதசமி அன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.

ஐப்பசி: அசுபதியில் அன்னஆபிஷேகம், வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா.

கார்த்திகை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறு அன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிஷேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.

மார்கழி: தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.

தை: சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பந்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.

மாசி: இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.

பங்குனி: சுக்லபட்சப் பிரதமையில் அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம், பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

Tags:    

Similar News