ஒன்பது நாட்களும் மூன்று ரூபங்களில் காட்சி தரும் அம்பிகை
- லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
- ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.
பரப்பிரும்மம் ஒன்றே என்றாலும், உலக மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு
துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தன் மகிமையை வெளிப்படுத்துகிறார்.
முதல் மூன்று நாட்கள் துர்கா சக்தி ரூபமாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லட்சுமி வடிவாகவும்,
கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து வழிபடுகிறோம்.
துர்காதேவி துன்பங்களை போக்குபவள்.
லட்சுமி ரூபமானது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியவள்.
நல்லறிவு இருந்தால் தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால்,
அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியாகப் பாவித்து வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமி அன்று அம்பிகையானவள்,
ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே
இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிக்கிறது.
அம்பிகையை விக்கிரக ரூபத்திலோ, படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்யலாம்.
ஒன்பது நாட்களிலும் தேவிபாகவத பாராயணம் செய்யலாம்.