ஆன்மிக களஞ்சியம்

பார்வதிதேவியுடன் கணேசர்

Published On 2024-01-29 11:25 GMT   |   Update On 2024-01-29 11:25 GMT
  • வலது புறம் அன்னை பார்வதி தேவியையும் இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
  • பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லையிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ளது காரையார் பாணதீர்த்தம் என்ற அருவி.

அதன்கிழக்குக் கரையில் உள்ள சித்திவிநாயகர் வலது புறம் அன்னை பார்வதி தேவியையும்

இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.

பிரம்மஹத்தி தோஷம், இவரை வணங்குவதால் போய்விடும் என்று நம்புகிறார்கள்.

தூர்வாஷ்டமியில் அருளும் கணபதி

தூர்வா என்பதற்கு அருகம்புல் என்று பெயர்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமிக்கு தூர்வாஷ்டமி என பெயர் நிலைத்தது விநாயகப்பெருமானது அருள் அன்று கிடைப்பதால் தான்.

இந்த சுபநாளில் விரதம் இருந்து விநாயகரை அருகம் புல்லால் அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.

பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News