ஆன்மிக களஞ்சியம்

பாவ நிவர்த்தி தரும் நவராத்திரி வழிபாடு

Published On 2023-10-19 11:16 GMT   |   Update On 2023-10-19 11:16 GMT
  • உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.
  • வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

நவராத்திரியில் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து,

அவர்களை தேவியாகவே கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திற்கு

தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழலாம்.

இந்த நாட்களில் கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன்

வித விதமான நைவேத்யங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும்.

பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதித்தல் சிறப்பும், மேன்மையும் தரும்.

பெண்கள், சிறுவர் , சிறுமிகளின் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை

நவராத்திரி பண்டிகைக்கே உரிய சிறப்பாகும்.

இந்த உலகில் அனைத்தையும் இயக்குவது ஆதிசக்தியே என்று வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையிலேயே பராசக்தியை நவராத்திரி நாட்களில் வழிபடுகிறோம்.

தவிர, உலகைக் காத்து இரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் அமைகிறது நவராத்திரி விழா.

அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது.

நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலுப்படி அமைத்து, தெய்வ பொம்மைகளை வைத்து மகிழ்வது

தொன்று தொட்டு வரும் வழக்கமாக உள்ளது.

இந்த நாட்களில் கொலு வைத்து வழிபடுவதோடு, ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபடல் வேண்டும்.

அம்பிகையின் சக்தி சொரூபத்தை நினைத்து தியானிப்பதால், சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News