ஆன்மிக களஞ்சியம்

பலன் தரும் வார விரதங்கள்

Published On 2023-10-29 12:54 GMT   |   Update On 2023-10-29 12:54 GMT
  • குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.
  • வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

வாரத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பலவிதமான விரதங்களை நாம் கடைபிடிக்கின்றோம்.

ஒவ்வொரு கிழமையும் கடைபிடிக்க வேண்டிய விரதங்களும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும் விரிவாக பார்க்கலாம்.

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது.

சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

ஆதித்யஹருதிய ஸ்தோத்திரம் சொல்லலாம்.

சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம்.

பகலில் ஒரு வேளை உணவருந்திவிட்டு இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

திங்கள்

திங்கட்கிழமை விரதம் சோம வார விரதம் ஆகும்.

சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒரு அந்தணரையும், அவர் மனைவியையும் சிவனாகவும், பார்வதியாகவும் பாவித்து பூஜை செய்து,

தான தர்மங்கள் செய்ய வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

செவ்வாய்

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

புதன்

புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, ஞானம் பெருகும்.

வியாழன்

குரு பகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை.

அந்தநாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும்.

குரு பகவானின் தோற்றமான தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் சாற்றி வழிபட வேண்டும்.

வெள்ளி

வெள்ளிக்கிழமை விரதம் சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது.

வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும்.

கடன் தொல்லை நீங்கும்.

சனி

சனிக்கிழமை அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் வந்தடையும்

Tags:    

Similar News