ஆன்மிக களஞ்சியம்
- இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம் நடந்தது.
- முத்துக் குமாரசுவாமியை வணங்கி வர நிச்சயமாக திருமணம் கைகூடும்.
வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை,
தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும்.
இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம்,
சாஸ்தாவின் பிறப்பு ஆகியவை இந்த நட்சத்திர தினத்தில்தான் நடந்தது.
செவ்வாய் தோஷமா?
முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்,
காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக் குமாரசுவாமியை (முருகன்)
வணங்கி வர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.