ஆன்மிக களஞ்சியம்

பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் விநாயகருக்கான மரங்கள்

Published On 2024-06-28 11:25 GMT   |   Update On 2024-06-28 11:25 GMT
  • விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
  • இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.

அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.

பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது.

எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால் அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.

விநாயகரும் 5 விதமான மரங்களும்

விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.

இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.

இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூத தத்துவத்தை விளக்குகிறது.

அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும்.

இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.

Tags:    

Similar News