ஆன்மிக களஞ்சியம்

பசு தோஷம் நீக்கும் தலம்:

Published On 2023-12-30 13:08 GMT   |   Update On 2023-12-30 13:08 GMT
  • கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்.
  • 12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது.

கவுதமர் இப்பகுதியில் தங்கியிருந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்.

அவரது புகழை குறைப்பதற்காக சில எதிரிகள் மாயப்பசு ஒன்றை உருவாக்கி ஆசிரமத்திற்கு அனுப்பினர்.

அதை வாஞ்சையோடு கவுதமர் தடவிக்கொடுத்தார்.

திடீரென அந்த பசு மறைந்துவிட்டது. மாயப்பசுவாயினும் கூட ஒரு பசு மறைவதற்கு காரணமாக அமைந்து விட்டோமே என வருந்திய முனிவர் இங்கிருந்த உபவேத நாதேஸ்வரரை வழிபட்டார்.

கவுதமருக்கு இறைவன் பாவ விமோசனம் அளித்தார். மகாமக குளத்தில் நீராடி பாவம் நீங்கியது. கவுதமருக்கு பாவ விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு கவுதமேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

அஷ்டமியில் இத்தலத்தில் உள்ள பைரவருக்கு பூஜை செய்து பயம் நீங்கப்பெறலாம்.

நவக்கிரக சன்னதி நீங்கலாக சனிக்கும் சூரியனுக்கும் தனிச்சிலைகள் உள்ளன.

பைரவரின் அருகே கஜலட்சுமியும், சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர்.

12 ராசிகளில் விருச்சிக ராசிக்குரிய கோவிலாக இது கருதப்படுகிறது.

விருச்சிக ராசி அன்பர்கள் இத்தலத்து இறைவனுக்கு அர்ச்சனை செய்து சிரமங்கள் நீங்கப்பெறலாம்.

இக்கோவிலுக்கு பசு தானம் செய்வதன் மூலம் பசு தோஷம் நீங்கப்பெறலாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சகல ஐஸ்வர்யமும் உண்டாகும்.

Tags:    

Similar News