ஆன்மிக களஞ்சியம்

பெரியமலையில் உள்ள லட்சுமி நரசிம்மர்

Published On 2023-11-25 12:52 GMT   |   Update On 2023-11-25 12:52 GMT
  • பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.
  • முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.

பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.

உள்ளே பெரிய பலிபீடமும் கொடிமரமும் காட்சி தருகின்றன.

இங்கே கொடிமரம் இருப்பதால் ஊர் நடுவில் உள நரசிம்மர் கோவிலில் கொடிமரம் இல்லை.

மலைக்கோவிலில்தான் முதன்மையான பூஜை செய்யப்படுகிறது.

முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.

கிழக்கு முகமாக இவர் அருள் பாலிக்கிறார்.

வடக்கு முகமாக நடந்தால் துவாரபாலகர்களைக் காணலாம்.

தெற்கு வாசலில் நுழைந்தால் கோவிலின் முன்மண்டபம் காணலாம்.

மண்டப விதானத்தில் நவீன ஓவியங்களைக் காணலாம். பெருமாளின் முன்பாகக் கருடாழ்வார் காட்சி தருகிறார்.

இவருக்குப் பின்புறமுள்ள சுவரில் சாளரமுண்டு.

இங்கிருந்து பார்த்தால் சிறியமலை யோக ஆஞ்சநேயர் தெரிவார்.

கருவறையைச் சுற்றி வரலாம். கருறையில் கருங்கல்லில் சிலாவடிவில் ஸ்ரீயோக நரசிங்கப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

கீழே அமைந்த பலகையில் சிறிய ஐம்பொன்சிலை உள்ளது.

இது ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமான் சிலையாகும். அடுத்து ஆதிசேடன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

புக்கான், மிக்கான் என வழங்கப்படும் அடியார்களையும் காணலாம்.

மலைமீதுள்ள பெருமானை ஆழ்வார் அக்காரக்கனி என்பர்.

இவரது ஐம்பொன்சிலை பாதுகாப்புக்கருதி ஊரில் உள்ள கோவிலில் வைத்துள்ளனர்.

அம்மன் பெயருக்கு அம்ருதவல்லி என்ற பெயருடன் சுதாவல்லி என்ற பெயருமுண்டு.

கற்றிருமேனியும் செப்புத் திருமேனியும் இவருக்கும் உண்டு.

சின்னமலையில் உள்ள அனுமார் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரைக் கண்டவாறே அவரை நினைந்து தவமிருப்பதால் இவரும் யோக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார்.

சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம் பின்புறக் கைகளில் ஏந்த முன்புறக் கைகளில் ஜப மாலை பற்றி உள்ளார்.

வீற்றிருந்த கோலம். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு உண்டு.

கார்த்திகை மாத உற்சவமும் குறிப்பிடத்தக்கது. அனுமான் சன்னதியடுத்து ஒரு குளமும் உண்டு.

அனுமான் தீர்த்தம் அல்லது சக்கரத்தீர்த்தம் என்று இது அழைக்கப்படுகிறது.

ராமர் சன்னதியும் உண்டு. அரங்க நாதரும் காட்சி தருகிறார்.

Tags:    

Similar News