பெருமாளுக்கு இடது பக்கத்தில் நின்று பூஜை
- பொதுவாக ஆலயங்களில் மூலவருக்கு இடது பக்கத்தில் நின்றுதான் அர்ச்சகர்கள் பூஜையை செய்வார்கள்.
- சுவாமிக்கு இடது பக்கம், அதாவது வலது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்கிறார்கள்.
பொதுவாக ஆலயங்களில் மூலவருக்கு இடது பக்கத்தில் நின்றுதான் அர்ச்சகர்கள் பூஜையை செய்வார்கள்.
இடது பக்கத்தில் நின்று தீபாராதனை காட்டும்போதுதான் பக்தர்கள் வழிபடுவதற்கு மிக எளிதாக இருக்கும்.
ஆனால் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் கருவறையில் இடது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்வதில்லை.
சுவாமிக்கு இடது பக்கம், அதாவது வலது பக்கத்தில் நின்று அர்ச்சகர்கள் பூஜை செய்கிறார்கள்.
இதன் பின்னணியில் ஒரு புராண கதை கூறப்படுகிறது.
பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து அசுரனிடம் இருந்து வேதங்களை மீட்டு வந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அப்படி அவர் அசுரனை வதம் செய்ய தனது சக்கரத்தை பிரயோகம் செய்தார்.
அந்த சக்கரத்தை வீசும் நிலையிலேயே கருவறையில் வேதநாராயண சுவாமியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வேதநாராயணசுவாமி சக்கர பிரயோக கோலத்தில் காட்சி அளிப்பதால் அதன் அருகில் அர்ச்சகர்கள் நிற்பதில்லை.
இதன் காரணமாகவே சுவாமியின் இடது பக்கத்துக்கு சென்று பூஜைகளை செய்கிறார்கள்.