ஆன்மிக களஞ்சியம்

பிரத்தியங்கரா தேவி வழிபாடு

Published On 2024-05-06 11:29 GMT   |   Update On 2024-05-06 11:29 GMT
  • இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
  • இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

பிரத்தியங்கரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறிய தாவது:

இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.

இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.

இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.

அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.

இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.

இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர் இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையும் அணிந்து காட்சி தருபவள் அக்கினி சுவாலை கொண்டவள்.

சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.

இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள்.

இந்த தேவியை மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

Tags:    

Similar News