- மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.
- புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.
மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.
அறிவைக் கொடுக்கும் புதன், கன்னிராசிக்கு வரும் சமயம் உச்சம் பெறும், மீனராசிக்கு வரும் சமயம் நீச்சமடையும்.
புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடுகள் : கடகம், விருச்சிகம்
ஒருவர் ராசிக்கு வந்து புதன் தங்கியிருக்கும் போது குடும்பம் அமைதியையும் சுகத்தையும் இழக்க நேரிடும்.
குடும்பத்தில் இருந்து பிரிந்திருக்க நேரிடலாம். சுபக்கிரகப் பார்வை ஏற்படுமானால் தீய பலன் மாறி நற்பலன் ஏற்படும்.
புதன், ராசிக்கு 2ல் வரும் சமயம் செல்வாக்கு குறையலாம். புதன் வலிமை பெற்றால் நற்பலனே விளையும்.
புதன், ராசிக்கு 3ல் வரும்போது எதிரிகளால் தொந்தரவு இருக்கலாம்.
சுபர்களின் பார்வை படுமானால் நல்ல பலன்களே உண்டாகும்.
ராசிக்கு 4ல் புதன் தங்கும்போது நல்ல பலன்கள் உண்டாகும்.
பொருள் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ராசிக்கு 5ல் வரும்போது சிரமம்தான்.
மற்றக் கிரகங்ளின் வலிமையால் நன்மையை உண்டாகும்.
புதன் ராசிக்கு 6ல் வரும்போது நன்மையே நடக்கும்.
எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.
மற்றவர்களிடையே மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதனால் செலவுகள் வரும்.
ராசிக்கு 7ல் புதன் வரும்போது அமைதி குறையலாம்.
ஆனாலும் விரைவில் நன்மையாகும்.
ராசிக்கு 8ல் வரும்போது, பலன்கள் நன்றாக இருக்கும்.
குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். பொருளாதார வசதி பெருகும்.
எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.
புதன் 9ல் வரும்போது தெய்வபக்தியால் சிரமங்களைப் போக்கிக் கொள்ளலாம்.
புதன், ராசிக்கு 10ல் வரும் சமயம் பணவசதியும், உற்சாகமும், கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவும் இருக்கும்.
ராசிக்கு 11ல் வரும்போதும் நன்றாக இருக்கும். கவலை ஏதும் இருக்காது.
புதன் ராசிக்கு 12ல் நிற்கும்போது சிரமமான நேரம்தான்.
ஆரோக்கியக் குறைவு, பண நெருக்கடி, மனக்குழப்பம் இருக்கும்.
கிரக சஞ்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது நற்செலவுகள் ஏற்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும்.