ஆன்மிக களஞ்சியம்

புண்ணிய கதி அடைய

Published On 2024-03-29 11:02 GMT   |   Update On 2024-03-29 11:02 GMT
  • கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

கார்த்திகை பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும்.

தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை.

களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம்.

கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

தை மாத பவுர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது.

வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும்.

நைவேத்தியப் பொருள் பாயசம். ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை.

தை மாதப் பவுர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாசி மாத பவுர்ணமி தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது.

வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

பங்குனி மாதத்தில் பவுர்ணமி அன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம்.

தயிர் அபிஷேகம் சிறப்பானது.

தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது.

இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம்.

ஒவ்வொரு மாத பவுர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News