null
- அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
- விநாயகர் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி ஆனைமுகம் கடவுளை பல்லாண்டுகள் கடுமையாக தவம் செய்தான்.
அவனது தவத்தை மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, 'மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்' என்றருளியதோடு
அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார்.
அதனால் அவன் 'திரிபுரன்' எனப்பெயர் பெற்றான்.
ஆனைமுகக் கடவுள் இவ்வரங்களைக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது முப்பட்டணங்களும் அழிவதோடு,
அவனும் சிவபிரானால் அழிவான் எனவும் கூறினார்.
விநாயகரின் வரத்தைப் பெற்ற பலி நாட்கள் செல்ல செல்ல,
உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள் முதலிய எல்லோருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான்.
இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவபிரானை வேண்டி கொள்ள,
அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான்.
பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது.
சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.
ஆம், வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி.
இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகியப் புனித நாளாகும்.
இத்திருநாளில் சிவபிரானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணை திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம்.
அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு,
சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவ பெருமானை தியானித்து வழிபட்டால்,
இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும்.
மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும்.
மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.