- இந்த தலத்தில் உள்ள அச்சுமுறி விநாயகரிடம் தேங்காய் உடைத்து சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.
- இந்த அச்சுமுறி விநாயகரை சதுர்த்தி தினங்களில் வழிபாடு செய்வது நல்லது.
புதிதாக ஏதேனும் தொழில் தொடங்க இருப்பவர்கள் அந்த தொழிலில் எந்த இடையூறும் வராதபடி இருப்பதற்காக அச்சரப்பாக்கம் வந்து வழிபாடு செய்வது நல்லது என்ற கருத்து உள்ளது.
இந்த தலத்தில் உள்ள அச்சுமுறி விநாயகரிடம் தேங்காய் உடைத்து சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.
ஒரு தேங்காய் அல்லது 11 தேங்காய் உடைக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் 108 சிதறு தேங்காய் உடைக்கலாம்.
இந்த வழிபாடு மூலம் அச்சுமுறி விநாயகர் ஆசி பெற்று தொடங்கும் தொழில்கள் வெற்றிகரமாக நடக்கும் என்பது பக்தர்களிடம் நம்பிக்கையாக உள்ளது.
ஒருதடவை காஞ்சி மகா பெரியவர் இந்த வழியாக செல்லும் போது இடையூறு ஏற்பட்டது.
அப்போதுதான் அவருக்கு இந்த தலத்தில் அச்சுமுறி விநாயகர் இருக்கும் தகவல் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் தேங்காய் உடைத்து அந்த விநாயகரை வழிபட்டார்.
அதுமட்டுமின்றி தொழில் தொடங்க ஆசி வேண்டி வரும் அனைவரிடமும் அவர் அச்சரப்பாக்கம் சென்று அச்சுமுறி விநாயகரை வழிபட வேண்டும் என்று சொல்லி அனுப்ப தவறியதே இல்லை.
இந்த அச்சுமுறி விநாயகரை சதுர்த்தி தினங்களில் வழிபாடு செய்வது நல்லது.
இதனால் அனைத்துவித சங்கடங்களும் விலகும்.
இல்லையெனில் சோமவார நாட்களில் இந்த விநாயகரை வழிபடலாம்.
இவரிடம் தடையை நீக்கும் வழிபாடுகளை செய்து முடித்த பிறகு ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் சென்று பலன்களை பெறலாம்.