- எனவே இந்த ஆலயத்தின் ஆரம்ப புள்ளியை கணக்கிடுவது இயலாத நிலையில் உள்ளது.
- ராமாயண கதையுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதன் பழைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமகிரி கால பைரவர் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
ராமாயண காலத்துக்கும் முற்பட்டதாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
எனவே இந்த ஆலயத்தின் ஆரம்ப புள்ளியை கணக்கிடுவது இயலாத நிலையில் உள்ளது.
ராமாயண கதையுடன் தொடர்புடையதாக இருப்பதால் இதன் பழைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் மிக மிக சிறிய ஆலயம்தான். பல்வேறு மன்னர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்துள்ளனர்.
ஆனால் அந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புகளில் சிறிதளவைதான் இப்போது காண முடிகிறது.
பெரும்பாலும் ஆலயத்தின் 90 சதவீத பகுதிகள் சிதிலமடைந்து விட்டது போன்ற நிலையில் உள்ளது.
நந்தி தீர்த்தம் அருகில் இருக்கும் சிறிய ஆலயம் முழுமையாக உருக்குலைந்து காணப்படுகிறது.
ஆந்திர மாநில தொல்லியல் துறையினர் அந்த கட்டிட அமைப்பை பராமரித்து இருந்தால் பல புதிய தகவல்கள் கிடைத்திருக்கும்.
ஆனால் பராமரிப்பு இல்லாததால் அவை மேலும் சிதிலமடையும் நிலையில் உள்ளன.
ஆலயத்துக்குள் செல்ல ஒரே ஒரு பிரதான வழி மட்டுமே உள்ளது.
தமிழக ஆலயங்களில் நுழைவுவாயில் இருபுறமும் கம்பீரமான துவார பாலகர்கள் இருப்பதை காண முடியும்.
ஆனால் இந்த ஆலயத்தில் துவார பாலகர்களுக்கு பதில் இரண்டு மிகச்சிறிய சிலைகள் உள்ளன.
அந்த சிலைகள் நமது கிராம பகுதிகளில் காணப்படும் நடுக்கல் போன்று உள்ளது.
அந்த பகுதியில் 3 லிங்கங்கள் உள்ளன.
மன்னர்கள் யாராவது அந்த லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.