ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்ட இடம்-சிறுவாபுரி தல வரலாறு
- முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.
- இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.
சிறுவாபுரி முருகன் கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால் காட்டிற்கு அனுப்பிவிட்டார்.
அங்கு லவனும், குசனும் பிறந்தனர். இதன் பிறகு ராமர் அஸ்வமேத யாகம் செய்தார்.
மனைவியின்றி யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால் அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும், குசனும் இத்தலத்தில் கட்டிப்போட்டுவிட்டனர்.
குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார்.
லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.
இதனால் ராமரே நேரில் சென்று மீட்டு சென்றார் என்பது ராமயண கால செய்தியாகும்.
இந்த வரலாற்று செய்தியை "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்" என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.
ராமனிடம் லவனும், குசனும் சண்டை போட்டதாகவும் அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.
சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.
இக்கோவிலில் அமைந்துள்ள ஆதிமூலவர் சிலா விக்கிரகம் பல்லவர் காலத்தை சேர்ந்தது.
கடந்த 1968-ம் ஆண்டு உபயதாரர்களால் 5 நிலை ராஜகோபுரம் புதியதாக கட்டப்பட்டது.
இக்கோவில் பிரார்த்தனை தலமாக உள்ளது.
இத்திருக்கோவிலில் மரகத பச்சைக் கற்களால் ஆன சிவன், அம்பாள், விநாயகர், நந்தி, மயில் மற்றும் பைரவர் விக்கிரகங்கள் உள்ளன.
முருகர் சன்னதியின் வலதுபுறம் அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாள் சன்னதி உள்ளது.
இவர்களுக்கு நடுவில் கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.