ஆன்மிக களஞ்சியம்

ராமேஸ்வரம் மூன்று தீர்த்தங்கள்

Published On 2023-09-15 11:14 GMT   |   Update On 2023-09-15 11:14 GMT
  • இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.
  • பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.

சிவ தீர்த்தம்

இத்தீர்த்தம், சுவாமி சந்நிதிக்கும் அம்பிகை சந்நிதிக்கும் இடையே அமைந்த அழகிய திருக்குளம்.

பைரவர் இத்தீர்த்தத்தில் நீராடி பிரமஹத்தி பாவத்தை நீக்கிக் கொண்டார்.

இதற்கு சிவகங்கைத் தீர்த்தம் என்னும் பெயரும் உண்டு.

சாத்தியாமிருத தீர்த்தம்

இத்தீர்த்தம், அம்பிகை திருச்சன்னதியில் சுக்கிரவார மண்டபத்திற்குத் தென்கிழக்கில் உள்ள கிணறு.

புரூரவச் சக்கரவர்த்தி இத்தீர்த்தத்தில் நீராடி தும்புரு சாபத்தைப் போக்கிக் கொண்டார்.

மூன்று தீர்த்தங்கள்

காயத்திரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரசுவதி தீர்த்தம் என்னும் மூன்று தீர்த்தங்களும், கிழக்குக் கோபுரத்துக்கு வடக்கே மூன்று கிணறுகளாக அமைந்துள்ளன.

இத்தீர்த்தங்களில் நீராடி காசிபர் சாபம் நீங்கப் பெற்றார்.

Tags:    

Similar News