ஆன்மிக களஞ்சியம்

சாய்பாபா பயன்படுத்திய நாழிக் கிணறு

Published On 2023-11-29 09:28 GMT   |   Update On 2023-11-29 09:28 GMT
  • கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது.
  • அந்த சுடாத மண்பானையை பாபா மரத்தின் அடியில் வைத்து வந்துவிடுவார்.

கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது.

இது நாழிக் கிணறு என்று அழைக்கப்படுகிறது.

இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய லென்டிபாக் எனும் நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா.

அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு இரைக்கப்பட்ட தண்ணீர் சுடாத மண் பானையில் சுமந்து சென்று செடிகளுக்கும், மரங்களுக்கும் ஊற்றுவார் பாபா.

அந்த சுடாத மண்பானையை பாபா மரத்தின் அடியில் வைத்து வந்துவிடுவார்.

அடுத்த நாள் அந்த பானை கரைந்து மண்ணோடு மண்ணாக ஆகிவிடும்.

ஒரு பானை கூட தனது சொத்தாக ஆகிவிடக்கூடாது எனும் தூய துறவறத்தை கடைபிடித்தார் பாபா.

Tags:    

Similar News