சங்க காலத்துக்கும் முன்பே பெருமாளுடன் தோன்றிய கோவில்
- இராமாயண காலத்துக்கும் முன்பு, கந்தப் புராண காலத்திற்கும் முன்பு இந்துமாக் கடல் தெற்கே இல்லை.
- இது சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து யுகம் கடந்து நிற்கும் கோவில்.
29 உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லையாம், உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.
இராமாயண காலத்துக்கும் முன்பு, கந்தப் புராண காலத்திற்கும் முன்பு இந்துமாக் கடல் தெற்கே இல்லை.
எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது. இலங்கை என்றொரு தீவு எல்லாம் இல்லை.
ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை ஒரே நிலபரப்பாக, ஒரே கண்டமாக இருந்தது. அதை இலெமூரியாக் கண்டம் என்பது தான் என்பார்கள்.
இலை மேற்படி மூரி என்றால் சோற்றுக் கற்றாலை.
இலை மூரிக்கண்டம் என்பது தான் இலெமூரியாக் கண்டம் ஆனது.
சோற்றுக் கற்றாலையின் இன்னொரு பேர் குமரி.
எனவே கற்றாலை மிகுந்த பெருநிலப் பரப்பு குமரிக் கண்டம் ஆயிற்று...
ஏழ்பனை நாடு, ஏழ் தெங்க நாடு முதலிய 49 நாடுகள் இருந்ததாகவும் தெரிகிறது.
பஃறுளி ஆறு இருந்தது. பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு என்ற மா மலை இருந்தது.
இவை எல்லாம் ஆழிப் பேரலையால் மூழ்கிப் போயிற்று என்று இளங்கோஅடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதற்சங்க காலத்தில் கபாட புரம் இருந்தது. தமிழின் தலைச் சங்கம் இருந்தது.
அதற்கெல்லாம் முன்னே மலயத்துவச பாண்டியன் அரசாண்ட போது, அவன் செல்வத் திருமகளாய் மதுரை மீனாட்சி அவதரித்த போதிலேயே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என்றால் இதன் தொன்மையை எதிர்த்து கொள்ளலாம்.
ஆகவே இது சங்கம் கடந்து, கால வெள்ளம் கடந்து யுகம் கடந்து நிற்கும் கோவில்.
மீனாட்சி காலத்துக் கோவில் என்றதும் இப்போதுள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள்.
இது பின்னால் எழுந்தது. பழைய மீனாட்சி கோவிலையும் கடல் கொண்டு விட்டது.
குமரிக் கண்ட காலத்தில் இந்த உத்திர கோசமங்கைக் கோவிலில் இப்போது இருக்கிற மாதிரித் தனியாக நடராசர் சன்னிதி எல்லாம் இல்லை இலிங்க வழிப்பாடும், அம்பிகை வழிபாடும் மட்டுமே இருந்தது.
சைவமும், வைணவமும் அக்காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டு இது.
தற்போதைய கோவிலில் நடராசர் சன்னதிக்கு மேற்கேஉள்ள இடத்தில் பெருமாளின் கிடந்த திருக் கோலம் இருந்திருக்கிறது.
குமரிக் கண்ட காலத்தில் அதற்கு வழிபாடும் நடந்து வந்திருக்கிறது.
என்ன காரணமோ தெரியவில்லை.
இப்போது அந்த இடம் மேலே கட்டப்பட்டு உமா மகேச்வரர் சன்னிதியாகக் கால வெள்ளத்தில் மாறி விட்டது.
உள்ளே மூடப் பட்ட நிலையில் பெருமாள் சிலை இருப்பதாக சொல்கிறார்கள்.