சரும வியாதியை குணப்படுத்திய நாகர் சிலை கருப்பு மை
- கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
- பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாக உருவத்தை சிலையாக செய்து
தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது.
அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சரும வியாதி குணமாகவில்லை.
நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை,
சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.
அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.
அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.
தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.
அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.
இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும்
இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார்.
மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது
பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது.
இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன்
பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன்
கேரள தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.