ஆன்மிக களஞ்சியம்

சர்வம் விஷ்ணு மயம்...

Published On 2024-03-31 09:45 GMT   |   Update On 2024-03-31 09:45 GMT
  • நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
  • ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

விஷ்ணு பிரபுவே, என் அகந்தை அழிந்து மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டுங்கள்.

என் மீது கருணை காட்டுங்கள்.

எப்போதும் உமையே சரண் அடையும் பாக்கியத்தை தாருங்கள் என்று தினந்தோறும் திருமாலை நினைத்து மனம் உருக வழிபட வேண்டும்.

இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாளில் மகாவிஷ்ணுவை நெருங்குவதற்கான சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்" என்று பொருள். எனவே விஷ்ணுவை வழிபட எல்லா இடத்திலும் வாய்ப்புகள் உண்டு.

நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.

ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, தாமோதரா என்று திருமாலின் திருநாமங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

Tags:    

Similar News