- இந்திரன் முதலான தேவர்கள் இந்திரலோகம் செல்லக் காரணமாக இருந்தது சிறுவாபுரி.
- இத்தலத்திற்கு வருபவர்கள் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.
1.நஞ்சு நீக்கப்பட்ட அமுதைத் தேவர்கள் இருந்து உண்ட இடம் சிறுவாபுரி.
2.இந்திரன் முதலான தேவர்கள் இந்திரலோகம் செல்லக் காரணமாக இருந்தது சிறுவாபுரி.
3.ராமன் அசுவமேத யாகம் செய்வதற்கு முன் அனுப்பிய குதிரையை அடக்கி லவன்குசன் ராமனுடன் போரிட்டு வென்ற இடம் சிறுவாபுரி.
4.அருண கிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட தலம் சிறுவாபுரி அர்ச்சனைத் திருப்புகழ், சிறப்புத் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இதுஒன்றே.
5.சிறுவாபுரியில் புகழ் பெற்ற சிவன் கோவில் ஒன்றும் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. பெருமாளை தீண்டா திருமேனி என்று அழைக்கிறார்கள். அந்த பெருமாளை அர்ச்சகர்கள் கூட தொடுவது கிடையாது.
6.பாலசுப்பிரமணியசாமி கோவில் சிறுவாபுரியின் வடமேற்கு மூலையில் தாமரைக்குளத்தின் முன்னால் விரிந்து பரந்து அமைந்துள்ளது.
7.சிறுவாபுரி ஆலய ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. 2003ம் வருடம் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்று உள்ளது.
8.சிறுவாபுரி கடவுள்களின் திரு உருவங்கள் பெரும்பாலும் மரகதக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. கொடி மரத்திற்குக் கீழே மயிலும், தென்கிழக்கில் சூரியனார் சிற்பமும், நேர் எதிரில் மரகத கணபதியும், மரகதக்கல்லில் இருப்பது தனிச்சிறப்பு.
9. பின் பிரகாரத்தில் சண்டிகேசவரர், ஆதிமூலர் நாகேசுவரர், முனீஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதி என பரிவார தேவதைகள் சூழ்ந்து நிற்க நடுநயமாக பாலசுப்பிரமணிய சுவாமியின் சன்னதி உள்ளது.
10.நவக்கிரகங்கள் ஒன்பதும் வாகனத்துடன் காட்சி தருவது சிறுவாபுரி ஆலயத்தின் மற்றொரு சிறப்பாகும்.
11.பிரம்மனைத் தண்டித்து பிரம்மனின் படைத்தல் தொழிலை ஏற்றுக்கொண்ட இப்பெருமானின் திருஉருவை வணங்கினால் வித்தைகள் பல கற்ற பலன் உண்டாகும் என புந்தி நிறை அறிவாள என்ற அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலால் அறியலாம்.
12.முருகனின் சன்னதிக்கு எதிரே அருணகிரிநாதரின் விக்கிரகம் முருகனின் புகழ்பாடி நிற்கும்படி அமைந்துள்ளது.
13.திருவண்ணாமலையைப் போலவே இத்தலத்திலும் அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்துள்ளார்.
14.மற்ற கோவில்களைவிட இத்தலத்தில் தான் மிகவும் மகிழ்ச்சிப் பெருக்கால் 'மகிமீற, மகிழ்கூர, மகிழ்வாக, மகிகூற இன்பமுற என ஐந்து இடங்களில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
15. இத்தலத்திற்கு வருபவர்கள் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை.