ஆன்மிக களஞ்சியம்

சிறுவையில் அருணகிரியார்

Published On 2024-05-13 11:55 GMT   |   Update On 2024-05-13 11:55 GMT
  • மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
  • நான்காவது திருப்புகழில் ‘ஜெயமதான நகர்’ என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.

இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு.

பழனிக்கு 'நாதவிந்து கலாதி நமோ நம' என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு 'சீதள வாரிஜ பாதா! நமோ நம' எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு.

'வானவர் ஊரினும் வீறாகில் அளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார்.

மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.

நான்காவது திருப்புகழில் 'ஜெயமதான நகர்' என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.

ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம்.

குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது, வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பது இ.ஃபோல உள்ளது.

Tags:    

Similar News