சிவ பூஜைக்குரிய மலர்கள் நான்கு வகைப்படும். அவை
1. கோட்டுப்பூ, 2. கொடிப்பூ, 3. நீர்ப்பூ, 4. நிலப்பூ.
ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றுள்ள பூக்கள் வருமாறு:
1. கோட்டுப் பூ
வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலிங்கை, நொச்சி, பன்னீர், அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா, மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல் இவைகள் கோட்டுப்பூ எனப்படும்.
2. கொடிப்பூ
நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக்கொன்றை, வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி (ஜாதிமல்லி), கொகுடி, பிச்சி இவை கொடிப்பூக்கள் எனப்படும்.
3. நீர்ப்பூ
செந்தாமரை, அதிக இதழில்லாத தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் போன்றவை நீர்ப்பூ என்றழைக்கப்படுகிறது.
4. நிலப்பூ
பட்டி, நாயுருவி, கண்ணுப்பூ, பச்சை, சிவந்திப்பூ, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி, செங்கீரை, கருஊமத்தை, செம்பரத்தை கொக்கிறகு, அனிச்சம், நந்தியாவட்டை இவை நிலப்பூ வகைகளாகும்.