ஆன்மிக களஞ்சியம்
- திருவானைக்கா தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே கட்டியதாக சொல்கிறார்கள்.
- பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.
திருவானைக்கா தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே கட்டியதாக சொல்கிறார்கள்.
சிவபெருமான் நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை
கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது.
பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.
இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
குபேர லிங்கம்
மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது.
மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது.
இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே.
இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாகக் குபேர லிங்க சன்னிதி ஆகிப்போனது.