சிவபெருமானை நேரில் காண அகத்தியரிடம் உதவி நாடிய ரோமரிஷி
- ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.
இதே போன்று தமிழகத்தின் சில சிவாலயங்களில் ரோமரிஷி சித்தரின் தியான பீடங்கள் இருக்கின்றன. அந்த சிவாலயங்களில் தியானம் செய்த காலங்களில் அவரது உடலில் இருந்து விழும் ரோமங்கள் பிரம்மனின் மரணத்தை குறிப்பதாக கருதப்பட்டது. ஒரு தடவை பிரம்மன் மறையும் போது மட்டுமே அவரது உடலில் இருந்து ஒரு ரோமம் விழுந்து லிங்கமாக மாறியதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ரோமரிஷி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது.
சிவாலயங்களில் தியானம் செய்து திருப்பணிகள் செய்த ரோமரிஷி இறுதியில் சிவனை நேரில் பார்த்து தரிசனம் செய்து சிவமுக்திபேறு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இதற்காக அவர் அகத்தியரின் உதவியை நாடினார்.
அவருக்கு உதவ முன் வந்த அகத்தியர், "தாமிரபரணி நதியில் நான் ஒன்பது தாமரை மலர்களை விடுகிறேன்.
அவை மிதந்து சென்று கரை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டால் சிவபெருமான் காட்சி தருவார்" என்றார்.
அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய 9 இடங்களில் சிவாலயம் அமைத்து ரோமரிஷி வழிபட்டார்.
இறுதியில் தாமிரபரணி நதியும் கடலும் சேர்ந்து சங்கமிக்கும் இடத்தில் ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்தார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.
இந்த தலங்களில் வழிபட்டால் ரோமரிஷி பெற்ற பலன்கள் நமக்கும் கிடைக்கும். அதற்கு ரோமரிஷியை போன்று மனமுருக வழிபட வேண்டியது அவசியமாகும்.