ஆன்மிக களஞ்சியம்
- மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
- முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.