ஆன்மிக களஞ்சியம்
- சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
- ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.
சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.
அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.
அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.
முக்தி கிடைக்கும்.
சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.
மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.
அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.