ஆன்மிக களஞ்சியம்

சூடம் மாவிலை தோரணம் விளக்கு தீபம் சொல்லும் தத்துவம்

Published On 2024-07-02 12:10 GMT   |   Update On 2024-07-02 12:10 GMT
  • ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.
  • அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.

இறைவழிபாட்டின் போது நாம் செய்யும் ஹோமங்கள், எல்லாப் பொருட்களையும் இறைவனே அழிக்கிறான் என்பதை காட்டுகிறது. தீபாராதனை காட்டுவது அறிவு செல்வத்தை உணர்த்துகிறது.

ஆனால் சூடம் ஏற்றி தீபாராதனை செய்வதற்கு வேறொரு தத்துவம் உள்ளது.

அதாவது சூடம் கடைசி வரை எரிந்து காற்றோடு கலந்து விடும். அதுபோல ஆன்மா கடைசியில் இறைவனுடன் கலந்து விடும் என்பதை சூடம் தீபாராதனை காட்டுகிறது.

ஆலயத்தில் மாவிலை தோரணம் கட்டுவதிலும் ஒரு தத்துவம் உள்ளது. மாவிலை ஒரு போதும் அழுகாது. காய்ந்து சருசாகி உலர்ந்து மண்ணோடு மண்ணாக சேர்ந்து விடும்.

அதுபோல நம் உடலும் இடையில் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் காய்ந்து சருகாகி உலர வேண்டும் என்பதை மாவிலை தோரணம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

ஆலயங்களுக்கு செல்லும் போது தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தி சென்றுள்ளனர்.

அந்த விளக்கு நீண்ட நேரம் எரிந்தால் இறைவன் நமக்கு அருள்கிறார் என்பார்கள்.

விளக்கு தீபம் எப்போதும் மேல் நோக்கியே எரியும்.

எனவே விளக்கு ஏற்றினால் கர்வம் மறைந்து, நம் அறிவானது மேல் நோக்கி உயர்ந்து பிரகாசிக்கும் என்பதை தீபம் காட்டுகிறது.

Tags:    

Similar News