ஆன்மிக களஞ்சியம்

சூரிய பகவான் வழிபாடு

Published On 2024-01-17 12:57 GMT   |   Update On 2024-01-17 12:57 GMT
  • உலகத் தோற்றத்தின் போது முதல் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று.
  • அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை.

உலகத் தோற்றத்தின் போது முதல் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று.

அந்த ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் தோன்றினான் என்று வேதங்களில் மார்கண்டேய புராணம் கூறுகிறது.

நூல்களில் ரிக் வேதம் மிகவும் பழமையானது.

இவ்வேதத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரத நாட்டில் சூரிய வழிபாடு நடைபெறுவதை அறிய முடிகிறது.

சூரியன் கண்கண்ட தெய்வம். வானவெளியில் நாம் காணும் சூரிய பகவான் ஏறிவரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் உண்டு.

அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை.

இந்த குதிரைகளை ஓட்டுகின்ற சாரதி அருணன். இவன் காலில்லாத நொண்டி. அத்தேர் மேற்கு முகமாக ஓடுகிறது.

மேரு மலையை வலமாகச் சுற்றி வருகிறது.

இவர் "ஆடி முதல் தை" வரை வடக்கிலிருந்து தெற்கு திசையில் செல்லுகிறார்.

இதை தஷணாயணம் என்கிறோம். அவரே "தை முதல் ஆனி" வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறார். இதை உத்தராயணம் என்கிறோம்.

சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்ற இருவரும் மனைவிமார்கள். யமன், சனி, அசுவினித்தேவர், முதலியோர் புத்திரர்கள், யமுனை, பத்திரை முதலியோர் புத்திரிகள்.

சூரியனைக் குறிக்க அருக்கண், ஆதித்தன், கதிரவன், கமலவினாயகன், கனலி, ஞாயிறு, தினகரன், பகலவன், பகன், பரிதி, பானு, மார்த்தாண்டன், ரவி, வெங்கதிரோன், வெய்யோன் முதலிய பல பெயர்களும் வழங்கப்படுகின்றன.

பிரம்மதேவரின் சாபத்தால் சூரிய பகவான் தொழு நோயால் துயர் அடைந்தார். அந்த துயர் போக்க இங்கு உள்ள தடாகத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டதால் தொழு நோய் நீங்கியது.

சூரிய பகவான் நீராடியதால் சூரிய தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News